உலக மக்கள் தொகை பெருக்கம் விழிப்புணர்வு பேச்சு போட்டி :

கோவில்பட்டி நேஷனல் பொறியில் கல்லூரியில்  நடைபெற்ற உலக மக்கள் தொகை பெருக்கம் விழிப்புணர்வு பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி வித்யாவுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கோவில்பட்டி நேஷனல் பொறியில் கல்லூரியில் நடைபெற்ற உலக மக்கள் தொகை பெருக்கம் விழிப்புணர்வு பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி வித்யாவுக்கு பரிசு வழங்கப்பட்டது.
Updated on
1 min read

கோவில்பட்டி நேஷனல் பொறியில் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மக்கள் தொகை பெருக்கம் குறித்த கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பேச்சு போட்டி நடந்தது.

வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அகிலேஷ் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட நலக் கல்வியாளர் முத்துசாமி, கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல் ஆகியோர் பேசினர்.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் எனும் தலைப்பில் மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி பி.வித்யா, 2-ம் இடம் பிடித்த மாணவர் பி.முகம்மது ஐசக், 3-வது இடம் பிடித்த மாணவி ஜி.கீர்த்தீகா ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் உலக மக்கள் தொகை பெருக்க விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஏற்பாடுகளை கல்லூரியின் மனித வள மேம்பாட்டுத் துறை மேலாளர் எஸ்.பிரபாகரன், நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in