TNadu
சாஸ்த்ரா சட்டப் பள்ளி மூலம் - விரைவில் மத்தியஸ்த மையம் : பல்கலை. துணைவேந்தர் தகவல்
மோதல் மேலாண்மைக்கு மனிதநடத்தையின் பல பரிமாணங்களை புரிந்துகொள்வது அவசியம். இது அனுபவ எதார்த்தத்தை நோக்கி வழி நடத்துகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்தார்.
சாஸ்த்ரா சட்டப் பள்ளியில் நடைபெற்ற ‘மோதல் மதிப்பீடு மற்றும் மேலாண்மை’ குறித்த 5 நாள் நிர்வாக பயிற்சியின் நிறைவு விழாவில் மத்தியஸ்த வல்லுநரான நிதிபதி பரத சக்கரவர்த்தி பேசும்போது, மோதல்போக்கை தவிர்க்க வழக்கு அல்லாத வழிமுறைகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவம் பற்றிஎடுத்துரைத்தார். மோதல் மேலாண்மை துறையில் ஈடுபட்டுள்ள வல்லுநர்கள் இவ்வகை வழக்கு சுமைகளை உணர வேண்டும் என்றார். இந்த பயிற்சியைதிறம்பட வடிவமைத்து நடத்திய உமா ராமநாதனை பாராட்டினார்.
சாஸ்த்ரா சட்டப் பள்ளியின் டாடா-பல்கிவாலா இருக்கை மற்றும் ஏடிஆர்
