செல்லிப்பட்டில் சுடுகாடு கேட்டு சாலை மறியல் :

புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட செல்லிப்பட்டு கிராம மக்கள்.
புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட செல்லிப்பட்டு கிராம மக்கள்.
Updated on
1 min read

புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு புது குடியிருப்பு பகுதி மக்கள் பல ஆண்டுகாலமாக சுடுகாடு இல்லாததால் சங்கராபரணி ஆற்றுப் பகுதியில் சடலங்களை புதைத்து வருகின்றனர். இவர்கள் பலமுறை அரசுக்கும் அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று அந்தகிராமத்தில் பெண் ஒருவர் இறந்துள்ளார். தொடர் மழையால்சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுடுகாட்டில்பள்ளம் விழுந்து தண்ணீர்தேங்கியிருப்பதால் அவரைபுதைக்க இடம் இல்லை. இதனால் ஆவேச மடைந்த அப்பகுதி மக்கள் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருக்கனூர் போலீஸார், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டிருந்த கிராம மக்களிடம், நிரந்தர சுடுகாடு அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in