

தேனி மாவட்டம், பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஆதிலட்சுமி. இருவரும் அரை பவுன் நகை, கொலுசு உள்ளிட்டவற்றை பையில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
செயின்ட்சேவியர் தெருவில் உறவினருடன் பேசிக் கொண்டிருந்தபோது தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பையை பறித்துக் கொண்டு ஓடினார். அச் சிறுவனை விரட்டிப் பிடித்து தென்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சார்பு ஆய்வாளர் மணிகண்டன் விசாரிக்கிறார்.