கொள்ளையில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியதாக 5 இளைஞர்கள் கைது :

கொள்ளையில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியதாக  5 இளைஞர்கள் கைது :
Updated on
1 min read

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.

அப்போது கால்டுவெல் காலனியில் உள்ள பூங்காவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் அமர்ந்துபேசிக் கொண்டிருந்த 5 பேர் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.

அவர்களை போலீஸார் சுற்றி வளைத்துபிடித்தனர். விசாரணையில் அவர்கள் கால்டுவெல் காலனியை சேர்ந்த ராமசாமிமகன் மதன்குமார் (23), கனி மகன் முத்துராஜ் (25), கணேசபுரத்தை சேர்ந்த யாக்கோபு மகன் இசக்கிமுத்து (20), கருணாநிதி நகரை சேர்ந்த ரஞ்சித் குமார் மகன் அந்தோணி ராஜ் (19), பிரையன்ட் நகரை சேர்ந்தராமர் மகன் பாலகணேஷ் (23) என்பதும் அவர்கள் 5 பேரும் சேர்ந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக தென்பாகம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்ற னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in