நீலகிரியில் 659 வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு :

நீலகிரியில் 659 வழக்குகளுக்கு  மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு :
Updated on
1 min read

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் லோக் அதாலத் எனப்படும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா தலைமை வகித்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி தரன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி தர், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிராஜன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதிமுருகேஷ் ஆகியோர், நிலுவையில்இருந்த பல்வேறு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு,அதில் சமரச தீர்வு கண்டனர்.

கோத்தகிரி நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதி ஜெய பிரகாஷ், குன்னூர் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி லிங்கம், கூடலூர் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி வெங்கட சுப்பிரமணியம், பந்தலூர்நீதிமன்றத்தில் கூடுதல் உரிமையியல் நீதிபதி பிரகாசம் ஆகியோர் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

வங்கி வாராக்கடன் வழக்குகளில் 53 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. மொத்தம் 1,288 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 659 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன. இதன் மூலம் முறையீட்டாளர்களுக்கு தீர்வுத்தொகையாக மொத்தம் ரூ.4.30 கோடி பெற்றுத்தரப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in