

சென்னையில் டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை. அவ்வப்போது திடீரென சில நிமிடங்கள் மழை பெய்து வருகிறது. உடனே வெயிலும் காய்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதலே கடும் காற்று வீசி வந்தது. விட்டுவிட்டு லேசான மழையும் பெய்துவந்தது. நேற்று காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பலத்த காற்றுடன் திடீர் மழை பெய்தது. வடசென்னை பகுதிகளில் லேசான மழையும், தென் சென்னை மற்றும் தாம்பரம், ஆலந்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது.
காலை நேரத்தில் மழை பெய்ததாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், மழையால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. திடீர் மழையால் மாநகரம் முழுவதும் குளிர்ந்தது.