விருதுநகர் மக்கள் நீதிமன்றத்தில் 3,650 வழக்குகளுக்கு தீர்வு :

விருதுநகர் மக்கள் நீதிமன்றத்தில் 3,650 வழக்குகளுக்கு தீர்வு :

Published on

விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், வில்லிபுத்தூர் மாற்று சமரச தீர்வு மைய அலுவலகம், விருதுநகர், அருப்புக்கோட்டை. திருச்சுழி, சிவகாசி, சாத்துர், ராஜபாளையம் ஆகிய நீதிமன்ற வளாகங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

வில்லிபுத்தூரில் நடை பெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு, விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலை வரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான கந்த குமார் தலைமை வகித்தார். நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் பங்கேற்றனர். மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில், வாகன விபத்து, காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி வாராக்கடன்கள், சிறு வழக்குகள் உட்பட 5,158 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. இவற்றில், சுமார் 3,650 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.8.52 கோடிக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in