

தென்காசி சொர்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அயூப் கான் (52). இவர், நேற்று முன்தினம் இரவு சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஆஷிக் (19) என்பவரை தடுத்து நிறுத்தி, கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆஷிக், வீட்டுக்குச் சென்று கத்தியை எடுத்து வந்து, அயூப்கானை குத்தியுள்ளார். இதைப் பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் ஆஷிக்கை பிடிக்க முயன்றுள்ளனர்.
அப்போது, ஆஷிக் தனது கையையும் கத்தியால் வெட்டிக்கொண்டார். அவர்கள் இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.