

திருவண்ணாமலை: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது.
மாநில துணைத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பிரசன்னா, மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் வரவேற்றனர். கூட்ட அறிக்கையை மாவட்டத் தலைவர் தமிழ்மணி சமர்ப்பித்தார். மாநில பொதுச் செயலாளர் தியோடர் ராபின்சன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், “மாநில தலைமை அலுவலகத்தில் மறைந்த நிறுவனர் மீனாட்சி சுந்தரத்துக்கு வெண்கல சிலை அமைக்கவும், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி மன்றத்துக்கு வலு சேர்ப்பது” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்டப் பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.