

தமிழகம் முழுவதும் நூற்றாண்டு பழமையான கோயில்களை ஆய்வு செய்து, சீரமைப்பு, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தொல் லியல் ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டவை. இக்கோயில்கள் கட்டிடக் கலையின் சிறப்புகளை பறைசாற்றுவதுடன், தமிழர்களின் நாகரிகத்தையும் வெளிப்படுத்து கின்றன. மேலும், பல்வேறு கோயில்களின் மூலிகை ஓவியங்களையும் பழமை மாறாமல் புதுப்பித்து பராமரிப்பது அவசியமாகி றது.
தொல்லியல் துறை வல்லுநர்களின் ஆலோசனை பெற்று, அவர்களது மேற்பார்வையில் இக்கோயில்களில் சீரமைப்பு பணியை மேற்கொண்டால் அதன் பழமையை பாதுகாக்க முடியும். இதை கருத்தில் கொண்டு, காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய அனைத்து இணை ஆணையர் மண்டலத்துக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள 100 ஆண்டு களுக்கு மேற்பட்ட கோயில்களை ஆய்வு செய்து, அவற்றின் தொன்மை அடிப்படையில் தர வரிசைப்படுத்தி சம்பந்தப்பட்ட இணை ஆணையர் மூலம் ஆணையருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.