சிதம்பரம் தேர் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்கவும் :

கடலூரில் பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் தீட்சிதர்கள் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியத்திடம் மனு அளித்தனர்.
கடலூரில் பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் தீட்சிதர்கள் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியத்திடம் மனு அளித்தனர்.
Updated on
1 min read

சிதம்பரம் நடராஜர் கோயில் தேர்திருவிழா, ஆருத்ரா தரிசன விழாவில் பொதுமக்களை அனு மதிக்க கோரி நேற்று சிதம்பரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ கேஏ.பாண்டியன் தலைமையில் தீட்சிதர்கள் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியத்திம் கோரிக்கை மனு அளித்தனர். அந்தமனுவில், "சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். தேர் நான்கு வீதிகளில்வலம் வரவும், தரிசனம் திருவிழா சிறப்பாக வழக்கம்போல் நடை பெற அனுமதி வழங்கிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், மாவட்ட அதிமுக அவைத்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், மாவட்ட மாணவர் அணி பொருளாளர் சங்கர் மற்றும் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களான பாஸ்கர் தீட்சிதர், நவமணி தீட்சீதர், சிவ சங்கர தீட்சிதர், நடராஜ ரத்தினசபாபதி தீட்சிதர், கார்த்தி தீட்சிதர் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in