மேலநாகையில் - பாரதியார் பிறந்தநாள் விழா :

மேலநாகையில் -  பாரதியார் பிறந்தநாள் விழா :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலநாகை கிராமத்தில் மகாகவி பாரதியார் சில காலம் வசித்து வந்தார். அதன் நினைவாக இங்கு அமைக்கப்பட்டுள்ள பாரதியார் நினைவு மண்டபத்தில் நேற்று பாரதியாரின் 140-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில், பாரதியாரின் சிலைக்கு மன்னார்குடி கோட்டாட்சியர் அழகர்சாமி மற்றும் அலுவலர்கள் மாலை அணிவித்தனர்.

இதேபோல, என்எஸ்எஸ் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா, நேசக்கரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியை மேலநாகை பாரதியார் அறக்கட்டளைத் தலைவர் பாரதி பூமிநாதன் ஒருங்கிணைத்து நடத்தினார்.

நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் பாரதியாரின் பாடல்களை பாடி, அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர். பின்னர், பாரதியார் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in