

கரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் வாரந்தோறும் மெகா கரோனாதடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இதுவரை 13 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இவைதவிர வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடும் பணியும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 82 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 48 சதவீதத்தினர் 2 தவணை தடுப்பூசியையும்செலுத்திக் கொண்டுள்ளனர்.இந்நிலையில், 14-வது மெகாகரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம்இடங்களில் இன்று நடைபெறு கிறது.
சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படஉள்ளது.