உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் :

விபத்தில் உயிரிழந்த ராணுவ உயர் அதிகாரிகளுக்கு திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வணிகர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்த படம்: ஆம்பூரில் நேற்று எம்எல்ஏ வில்வநாதன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் 13 வீரர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் திருப்பத்துார் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, மாவட்டத் தலைவர் ஆம்பூர் கிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

ஆம்பூர்

நிகழ்ச்சியில், ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், முன்னாள் எம்எல்ஏ பாலசுப்பிரமணியன், பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் வாசுதேவன், பாஜக வேலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் குமரன், கோபிநாதன், பாஜக நகரத் தலைவர் பிரேம்குமார், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் குப்புசாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், அமமுக நிர்வாகி ராம. னிவாசன் உள்பட பல்வேறு அமைப்புளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in