சிதம்பரம் கோயில் தேர் திருவிழாவுக்கு அனுமதி இல்லை :

சிதம்பரம் கோயில் தேர் திருவிழாவுக்கு அனுமதி இல்லை :

Published on

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா குறித்து கோட்டாட்சியர் ரவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் வரும் 19-ம் தேதி நடைபெறும் தேர் திருவிழாவிற்கு அனுமதி இல்லை. கோயிலுக்கு உள்ளேயே தேர் திருவிழாவை நடத்திக் கொள்ள வேண்டும். மேலும் 20ம் தேதி தரிசன விழாவிற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என கோட்டாட்சியர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட தீட்சிதர்கள், இதுகுறித்து கோயில் பொதுதீட்சிதர்களிடம் கலந்துபேசி முடிவு கூறுவதாக கூறி சென்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in