இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - சேலம் மாநகராட்சியில் 7.19 லட்சம் வாக்காளர்கள் :

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார்.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார்.
Updated on
1 min read

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக் காக, சேலம் மாநகராட்சியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மாநகராட்சிப் பகுதியில் 7.19 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில், சேலம் மாநகராட்சி ஆணையர், 4 நகராட்சிகளின் ஆணையர்கள், 31 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் ஆகியோர் இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டனர்.

சேலம் மாநகராட்சியில் இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலர்கள், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் வார்டுகளின் எண்ணிக்கை 60, வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 709, ஆண் வாக்காளர்கள் 3,52,523 பேர், பெண் வாக்காளர்கள் 3,66,751 பேர், இதர வாக்காளர்கள் 87 பேர் என மொத்தம் 7,19,361 வாக்காளர்கள் உள்ளனர்.

இதேபோல், ஆத்தூர் நகராட்சியில் ஆண்கள்-24,438 பேர், பெண்கள்-27121 பேர், இதரர்-5 உள்ளிட்ட மொத்தம் 51,564 வாக்காளர்கள். எடப்பாடி நகராட்சியில் ஆண்கள்- 24,331 பேர், பெண்கள்- 24,667 பேர், இதரர்- 8 பேர் உள்ளிட்ட மொத்தம் 49,006 வாக்காளர்கள்.

மேட்டூர் நகராட்சியில் ஆண்கள்- 23,298 பேர், பெண்கள்- 24,667 பேர், இதரர்- 2 பேர் உள்ளிட்ட மொத்தம் 48,333 வாக்காளர்கள். நரசிங்கபுரம் நகராட்சியில் ஆண்கள்-10,423 பேர், பெண்கள்- 11,345 பேர், இதரர்- 2 பேர் உள்ளிட்ட மொத்தம் 21,770 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 31 பேரூராட்சிகளில் 1,92,089 ஆண் வாக்காளர்கள், 1,98,790 பெண் வாக்காளர்கள், இதரர் 15 பேர் என மொத்தம் 3,90,894 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்காக சேலம் மாநகராட்சி உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 1,451 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. ‘வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்று இருப்பதை பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்’ என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் 5 நகராட்சி

இதுபோல் ராசிபுரம் நகராட்சியில் 40 ஆயிரத்து 917 வாக்காளர்கள், திருச்செங்கோடு நகராட்சியில் 80 ஆயிரத்து 030 வாக்காளர்கள், குமாரபாளையத்தில் 66,581, பள்ளிபாளையத்தில் 37 ஆயிரத்து 554 வாக்காளர்கள் உள்ளனர். 5 நகராட்சிகளிலும் சேர்த்து 1,56,552 ஆண், 1,67,126 பெண், 84 இதரர் என மொத்தம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 762 வாக்காளர்கள் உள்ளனர்.

அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 143 ஆண் வாக்காளர், 1 லட்சத்து 18 ஆயிரத்து 622 பெண் வாக்காளர், 31 இதரர் என மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 796 வாக்காளர்கள் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in