பல்வேறு இடங்களில் முப்படை தளபதிக்கு அஞ்சலி :

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முப்படை தளபதியின் உருவப்படத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.(வலது)  இந்துமுன்னணி சார்பில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் வாசலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.படம்: மு.லெட்சுமி அருண்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முப்படை தளபதியின் உருவப்படத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.(வலது) இந்துமுன்னணி சார்பில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் வாசலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.படம்: மு.லெட்சுமி அருண்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முப்படை தளபதியின் உருவப்படத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு, காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பாளையங்கோட்டையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் டி.பி. சுரேஷ்குமார், அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாளையங்கோட்டை சாரதா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முப்படை தளபதி யின் உருவப்படத்துக்கு மாணவி யர் மலர் தூவி அஞ்சலி செலுத் தினர். நிகழ்ச்சிக்கு 3-வது தமிழ்நாடு மகளிர் பட்டாலியன் என்சிசி கமாண்டிங் அதிகாரி கர்னல் பிஎஸ் தன்வர் தலைமை வகித்தார். திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் அஞ்சலி செலுத்தப் பட்டது.

கயத்தாறு

காவல் நிலையம் முன்பு தொடங்கிய மவுன ஊர்வலம், மதுரை பிரதான சாலை, கடம்பூர் சாலை வழியாக பேரூராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது. அதன் பின்னர் பிபின் ராவத் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், காவல் ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர்கள் அந்தோணி திலிப், பாலு, முன்னாள் ராணுவ வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.

இதே போல், கோவில்பட்டியில் நகர இந்து முன்னணி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பயணியர் விடுதி முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர்கள் வெங்கடேசன், முனீஸ்வரன், மனோகர், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு பிபின் ராவத் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நாகர்கோவில்

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில், நாகர்கோவிலில் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸார் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் நிர்வாகிகள் அலெக்ஸ், மகேஷ் லாசர், ராம்குமார், ஸ்டீபன், டென்னிசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் கருங்கல் ராஜீவ் சந்திப்பில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுபோல், குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக நல அமைப்பினர் பிபின் ராவத் மற்றும் 13 பேர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in