கடலூர் ஒன்றியப் பகுதியில் - வீடு கட்டும் திட்ட பணிகளை காலக்கெடுக்குள் முடித்திடுக :
கடலூர் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி யர் கி.பாலசுப்ரமணியம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட விலங்கல்பட்டு ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.449 லட்சம் மதிப்பீட்டில் நடுவீரப்பட்டு - விலங்கல்பட்டு சாலை அமைக்கும் பணிகள் நடை பெறுவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
குமலங்குளம் ஊராட்சியில் பிரதமர் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணியினை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விரைந்து முடிக்க அலுவலர்கள் மற்றும் பயனாளிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அன்னவெளி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வீரன்கோயில் வாய்க்காலில் ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதையும், செம்மங்குப்பம் ஊராட்சி யில் மரக்கன்றுகள் நடப்பட் டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உதவி செயற்பொறியாளர்(சாலை மற்றும் பாலங்கள்) நாராயணன், உதவி செயற் பொறியாளர் முகமதுயாசின், உதவி பொறியாளர் கல்யாணசுந் தரம்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்ரமணியன், சக்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
