

விருத்தாசலத்திலிருந்து நேற்று காலை தனியார் பேருந்து கடலூர் அருகே பெரியபிள்ளையார் மேடு அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் செந்தில்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். கட்டுப்பாட்டை இழந்து பேருந்து அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது. பொதுமக்கள் செந்தில்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.