

திருவாரூரில் பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய அரசின் திட்டங்களில் பிரதமர் மோடியை புறக்கணிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் திட்டத்தை, மாநில அரசின் திட்டமாக காட்டிக்கொள்வது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்ந்தால், பாஜக சார்பாக பெரும் போராட்டம் நடத்துவோம்.
இந்து சமய அறநிலைத் துறையின் செயல்பாடு பாரபட்சமில்லாமல் இருக்க வேண்டும். பாரம்பரிய பெருமைமிக்க தஞ்சை பெரிய கோயிலை மாநில அரசு, மத்திய அரசுடன் இணைந்து புனரமைக்க வேண்டும் என தெரிவித்தார்.