பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  விருதுநகரில் 1,126 புகார்கள் பதிவு :

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விருதுநகரில் 1,126 புகார்கள் பதிவு :

Published on

இங்கு, பெண்களின் பாதுகாப்புக்காக அவசர சேவை மற்றும் ஆலோசனைகள், மருத்துவ சேவை, காவல்துறை சார்ந்த, உளவியல் ரீதியான உதவிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறது.

இம்மையத்தில் ஆட்சியர் நேற்று திடீர் ஆய்வுசெய்தார். பின்னர் அவர் கூறியதாவது: இந்த மையத்தில் பெண்களின் குடும்பப் பிரச்சினை, பாலியல் துன்புறுத்தல், வரதட்சணைக் கொடுமை, குழந்தை திருமணம், பாலியல் வன்புணர்வு தொடர்பாக இதுவரை 1,126 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் உதவிகளுக்கு, 181 சேவை எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in