கிருஷ்ணகிரியில்  -  இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி :

கிருஷ்ணகிரியில் - இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி :

Published on

கிருஷ்ணகிரியில் இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு 2 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது.

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு 2 நாள் பயிற்சி தொடங்கியது. கரோனா பரவலால் 1-ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புமாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி, இழப்புகளை சரி செய்யும் முறையில் மாவட்டத்தில், 671 மையங்களில், 1,300 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இல்லம் தேடி கல்வி மையத்தில் மாலை நேரங்களில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில் கிருஷ்ணகிரி ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கான இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், 85 பேருக்கு கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 நாள் பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதில் ஆசிரியர்கள் அசோக், அனிதா, ராஜா, கெலன் தனபா இன்பராணி, மகேந்திரவர்மா, கவுதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தன்னார்வலர்களுக்கு கற்றல், கற்பித்தல், உள்ளிட்ட செய்முறை பயிற்சி அளித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in