பெல் நிறுவனத்துக்கு கோல்ட் பிளஸ் விருது :

திருச்சி பெல் நிறுவனத்துக்கு ஐரோப்பிய தர மேலாண்மை அறக்கட்டளை வழங்கிய விருதை பெற்றுக் கொள்கிறார் பொது மேலாளர் (பொறுப்பு) எஸ்.வி. னிவாசன். உடன் பெல் தலைவர் நலின் ஷிங்கால் (இடது ஓரம்).
திருச்சி பெல் நிறுவனத்துக்கு ஐரோப்பிய தர மேலாண்மை அறக்கட்டளை வழங்கிய விருதை பெற்றுக் கொள்கிறார் பொது மேலாளர் (பொறுப்பு) எஸ்.வி. னிவாசன். உடன் பெல் தலைவர் நலின் ஷிங்கால் (இடது ஓரம்).
Updated on
1 min read

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப் பட்ட ஐரோப்பிய தர மேலாண்மை அறக்கட்டளை சார்பில் திருச்சி பெல் நிறுவனத்துக்கு உன்னத மாதிரியின் அடிப்படையில் வணிகச் சிறப்புக்கான கோல்ட் பிளஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் பெங்களுரூவில் நடைபெற்ற விழாவில், பெல் நிறு வன திருச்சி வளாக பொதுமேலா ளர் (பொறுப்பு) எஸ்.வி.னி வாசன், பெல் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நலின் ஷிங்கால் முன்னிலையில் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

முன்னதாக 3 பேர் கொண்ட சிஐஐ எக்சிம் வங்கியின் வணிக உன்னத விருதுகளுக்கான மதிப் பீட்டுக் குழு அக்.18 முதல் 20-ம் தேதி வரை திருச்சி பெல் நிறு வனத்தில் நேரடியாக மதிப்பீடு செய்தது. தொடர்ந்து 4 உறுப் பினர்கள் காணொலி வாயிலாக மதிப்பீடு செய்தனர்.

பெல் நிறுவன அலுவலர்கள், வெளித் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டப் பயனாளிகள் ஆகியோரு டனும் இக்குழுவினர் காணொலி வாயிலாகவும் உரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in