விருதுநகர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் - வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு :

விருதுநகர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் -  வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமியும், 85 வயது முதியவரும் உயிரிழந்தனர்.

வத்திராயிருப்பு அருகே காடனேரியில் நேற்று முன்தினம் பெய்த மழையால், காளீஸ்வரன் என்பவரது வீட்டின் சுவர் நேற்று காலை இடிந்து விழுந்தது. இதில், அவரது மகள் முக்தீஸ்வரி (3) பலத்த காயமடைந்தார்.

குடும்பத்தினர் குழந்தையை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரி வித்தனர். இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் அருகே செங்குன்றாபுரத்தை அடுத்துள்ள செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் (85). வீட்டில் தனி யாக வசித்து வந்தார். இவரது 2 மகன்கள் மதுரையில் வசிக்கின்றனர். மதுரையில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டு நேற்று முன்தினம் ஊர் திரும்பினார்.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி காளியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆமத்தூர் போலீஸார் சம்பவ இடம் சென்று ஜேசிபி மூலம் இடிபாடுகளை அகற்றி காளியப்பன் உடலை மீட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in