நெல்லை புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு :

ப.சரவணன்
ப.சரவணன்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ப.சரவணன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்த மணிவண்ணன் சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை போலீஸ் நிர்வாக பிரிவில் பணியாற்றிய ப.சரவணன் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று அவர்பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டம் ஒழுங்குக்குமுக்கியத்துவம் அளிக்கப்படும். பழைய குற்றவாளிகள் கண்காணிக்கப்படுவார்கள். மாவட்டத்தில் ரவுடிகள், கூலிப்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

புதிய காவல் கண்காணிப்பாளர் சரவணன், 2001-ல் டிஎஸ்பியாக தேர்வு பெற்றவர். விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டிஎஸ்பியாக பணியாற்றியுள்ளார். 2009-ம் ஆண்டு ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று தருமபுரி, சேலம் பகுதிகளில் பணிபுரிந்தார். 2011-ம் ஆண்டில் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று கடலூர் மாவட்டத்திலும், உளவுத்துறையிலும், சென்னை யில் போலீஸ் நிர்வாக பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in