முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது நினைவு தினம் - செங்கை, காஞ்சி, திருவள்ளூரில் அன்னதானம் :

செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவிலில் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவிலில் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவரது படத்துக்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் 5-வது நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் மெழுகுவத்தி ஊர்வலம் நடைபெற்றது.

இதேபோல் செங்கல்பட்டு நகர செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார், சிங்கப்பெருமாள் கோவிலில் ஒன்றிய செயலாளர் குணசேகரன், மறைமலை நகரில் முன்னாள் நகரமன்ற தலைவர் எம்.ஜி.கே.கோபி கண்ணன், வேங்கடமங்கலத்தில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.கஜேந்திரன், கோவிலம்பாக்கத்தில் மணிமாறன் ஆகியோர் தலைமையில் அன்னதானம் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் வி.சோமசுந்தரம் தலைமையில் மாவட்டம் முழுவதும் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருவள்ளூரில் மாவட்ட செயலாளர்கள் வடக்கு- பலராமன், மேற்கு- பி.வி. ரமணா, கிழக்கு - மூர்த்தி, மத்தியம் - பெஞ்சமின், தெற்கு - அலெக்சாண்டர் ஆகியோர் தலைமையில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் அமமுக சார்பிலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in