மின்சாரம் பாய்ந்து கேபிள் டிவி ஆப்ரேட்டர் உயிரிழப்பு :

மின்சாரம் பாய்ந்து கேபிள் டிவி ஆப்ரேட்டர் உயிரிழப்பு :

Published on

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதி யைச் சேர்ந்தவர் சூர்யா என்றயுகபிரகாஷ் (29), கேபிள் டிவி இயக்குபவராக செயல்பட்டு வந்தார். நேற்று மாலையில் அப்பகுதியில் செல்லும் கேபிள் டிவிக்கான ஒயரில் ஏற்பட்ட பழுதினை சரிபார்க்க மின்கம்பத்தில் ஏறி சரிபார்த்த போது மின்சாரக் கம்பியில் அவரது உடல் பட்டது. இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் மயக்கமுற்று மின்கம்பத்திலேயே தொங்கி யுள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சிய டைந்த பொதுமக்கள் அவரைமீட்டு கடலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். எனி னும், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரி வித்தனர்.

இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in