கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் - பழநி கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க 1136 மூட்டை நாட்டுச்சர்க்கரை கொள்முதல் :

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் -  பழநி கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க 1136 மூட்டை நாட்டுச்சர்க்கரை கொள்முதல் :
Updated on
1 min read

ஈரோடு கவுந்தப்பாடி ஒழுங்குமுறைவிற்பனைக் கூடத்தில், பழநி முருகன் கோயில் தேவஸ்தானத்தினர், 1136 மூட்டை நாட்டுச்சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தைக் கொள்முதல் செய்தனர்.

பழநி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தம் தயாரிப்பிற்கு தேவையான நாட்டுச்சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை, ஈரோடு கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து தேவஸ்தான நிர்வாகத்தினர் கொள்முதல் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 1384 மூட்டைகளில், 1136 மூட்டை நாட்டுச்சர்க்கரையை, ரூ.32.51 லட்சத்திற்கு தேவஸ்தான நிர்வாகத்தினர் கொள்முதல் செய்தனர்.

கட்டுப்படியாகாத விலை காரணமாக 248 மூட்டைகளை விவசாயிகள் கிடங்கில் இருப்பு வைத்தனர். 60 கிலோ எடை கொண்ட முதல் தர சர்க்கரை மூட்டை ரூ.2900 முதல் ரூ.2950 வரையிலும், இரண்டாம் தர மூட்டைகள் ரூ.2800 முதல் ரூ.2880 வரையிலும் விலை போனது. அதேபோல் தலா 30 கிலோ எடை கொண்ட 13 மூட்டை வெல்லம் ரூ.19 ஆயிரத்திற்கு விற்பனையானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in