

வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப் படும் என ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், சாக்கடை இணைப்பு கட்டணம், குத்தகை இனம் மற்றும் வரியில்லா இனங்கள் ஆகியவற்றை உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
அனைத்து பொதுமக்களும் வரி செலுத்தி, மாநகராட்சிப் பகுதியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் 2021 -22-ம் ஆண்டு முடிய உள்ள நிலுவை இனங்களை செலுத்தாத உரிமைதாரர்களின் வீட்டுக் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும், எனத் தெரிவித்துள்ளார்.