பெரம்பலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 4,157 பேர் பங்கேற்பு :

பெரம்பலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 4,157 பேர் பங்கேற்பு  :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ரோவர் கல்வி குழுமம் சார்பில் பெரம்பலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் ப.வெங்கடபிரியா தலைமை யில் நேற்று நடைபெற்றது.

பெரம்பலூர் எம்எல்ஏ ம.பிரபா கரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியது: பெரிய தொழிற்சாலைகள் அதி கமில்லாத பெரம்பலூர் மாவட் டத்தில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 126 தனியார் நிறுவனங்கள் பங் கேற்றுள்ளன. 4,157 இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், 591 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

திருச்சி மண்டல வேலை வாய்ப்பு இணை இயக்குநர் மு.சந்திரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மு.முரளிதரன், ரோவர் கல்வி நிறுவனங் களின் துணைத் தலைவர் ஜான்அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in