

சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவர் கிறிஸ் டலினா ஜார்ஜிவா கூறும்போது, ‘கரோனா முதல் மற்றும் 2-ம் அலை் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது.
பின்னர் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதால் பொருளாதார சரிவிலிருந்து உலக நாடுகள் படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், ஒமைக்ரான் வகை வைரஸ் பரவி வருகிறது. இதனால் பொருளாதார மீட்சிநெருக்கடியைச் சந்திக்கும். இதனால், உலகின் பொருளாதாரம் அக்டோபர் மாதத்தில் கணிக்கப்பட்டதை விட சரிவைக் காணும்" என்றார்.
நடப்பு ஆண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சி 5.9% ஆகவும், அடுத்த ஆண்டில் 4.9% ஆகவும் இருக்கும் என்று ஐஎம்எப் சமீபத்தில் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.