பள்ளி, கல்லூரிகளின் கட்டிட உறுதித் தன்மையை ஆய்வு செய்க : தமிழ்நாடு அரசுக்கு தவாக கோரிக்கை

பள்ளி, கல்லூரிகளின் கட்டிட உறுதித் தன்மையை ஆய்வு செய்க :  தமிழ்நாடு அரசுக்கு தவாக கோரிக்கை
Updated on
1 min read

மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டிட உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் வேமுருகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில், சில கல்லூரிகள் பழமையானது என்பதோடு, அக்கல்லூரிகளின் கட்டிடங்களில் பெரும்பாலானவை மோசமான நிலையில் உள்ளன.

கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து விழுவதும், சேதமடைவதும் நடந்து வருகிறது.

எனவே, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பழுதான பள்ளி, கல்லூரி கட்டிடங்களை பட்டியலிட்டு, அவற்றை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான கழிவறை, குடிநீர், காற்றோட்டமான அறைகளை ஏற்படுத்துவது மற்றும் தேவையான ஆசிரியர்களை நியமிப்பது போன்ற அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in