சாமிதோப்பில் ஏடுவாசிப்பு திருவிழா :

சாமிதோப்பில் ஏடுவாசிப்பு திருவிழா :

Published on

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில், கார்த்திகை மாதம் 17 நாட்கள் நடைபெறும் திருஏடு வாசிப்பு திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

இதையொட்டி முத்திரி பதமிடுதல், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, உச்சிப்படிப்புஆகியவை நடைபெற்றன. திருஏடு வாசிப்பை பாலஜனாதிபதி தொடங்கி வைத்தார். வாகன பவனி நடைபெற்றது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு திருஏடு வாசிப்பும், வாகன பவனியும், அன்னதர்மமும் நடைபெறுகிறது.

வரும் 17-ம் தேதி வைகுண்டரின் திருக் கல்யாண திருஏடு வாசிப்பு, அய்யாவுக்கு சீர் வரிசையாக பழங்கள், இனிப்பு மற்றும் பொருட்களை சுருள்வைத்து வழிபாடு செய்தல், வாகன பவனி, அன்னதானம் ஆகியவை நடைபெறும்.

விழா நிறைவு நாளான 19-ம் தேதி மாலை 6 மணிக்கு பட்டாபிஷேக ஏடு வாசிப்பும், இரவு வாகன பவனியும் நடைபெறுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in