தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் - கழிப்பறையில் பச்சிளம் குழந்தையின் சடலம் :

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின்  -  கழிப்பறையில் பச்சிளம் குழந்தையின் சடலம் :
Updated on
1 min read

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300 படுக்கை கொண்ட வார்டின் அருகே அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக துப்புரவு ஊழியர்கள் நேற்று காலை சென்றபோது, அங்கிருந்த ஒரு கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை.

இதையடுத்து, கழிப்பறைக்கு தண்ணீர் செல்லும் சிறிய பிளாஸ்டிக் தொட்டியை அவர்கள் திறந்து பார்த்தபோது, அதில் தொப்புள்கொடிகூட அகற்றப்படாத நிலை யில் ஒரு பெண் குழந்தையின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, மருத்துவர்கள் அளித்த தகவலின்பேரில், டிஎஸ்பி கபிலன், மருத்துவக் கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் மற்றும் போலீஸார் அங்கு சென்று, குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in