

தமிழகத்தில் ஆதிதிராவிடர் களின் முன்னேற்றத்துக்காக தொண்டாற்றி வருபவர்களில் ஒருவருக்கு அரசு ஆண்டு தோறும் ‘அண்ணல் அம்பேத்கர் விருது’ வழங்கி வருகிறது.
அதன்படி, அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை டிசம்பர் 6-ம் தேதிக்குள் (நாளை) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண் டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.