கட்டுமான தொழிலாளர்கள் மறியல் :

கட்டுமான தொழிலாளர்கள் மறியல் :
Updated on
1 min read

திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று காலை கட்டிடத் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சிஐடியு தமிழ் மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ் மாநில கட்டிடத் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் டி.குமார், மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாநிலக்குழு உறுப்பினர்கள் கணேசன், ராஜன், சாலையோரப் பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கட்டுமானப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை குறைத்து, விலையை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டங்களையும், நலவாரியத்தையும் சீர்குலைக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்பை கைவிடவேண்டும். மாத ஓய்வூதியம் ரூ.3,000 மற்றும் இதர பலன்களை வழங்குவதற்கு, மாநிலங்களுக்கு நலவாரியங்களில் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்டதாக பெண்கள் 80 பேர் உட்பட 130 பேரை போலீஸார் கைது செய்து, பின் மாலையில் விடுவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in