இறுதி ஊர்வலத்தில் மின்கம்பி மீது மலர் மாலைகளை வீச வேண்டாம் : மின்வாரியம் வேண்டுகோள்

இறுதி ஊர்வலத்தில் மின்கம்பி மீது மலர் மாலைகளை வீச வேண்டாம் :  மின்வாரியம் வேண்டுகோள்
Updated on
1 min read

மதுரை மின்பகிர்மான மேற்பார்வைப் பொறியாளர் சி.வெண்ணிலா கூறியதாவது:

மின்பாதைகளுக்கு அருகில் பட்டம் விடும்போது அது அறுந்து பட்டம், நூல் ஆகியவை உயர் மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகள் மற்றும் துணை மின் சாதனங்கள் மீது விழும்போது மின் தடை ஏற்படுகிறது.

இறுதி ஊர்வலங்களின்போது மாலைகளை தூக்கி வீசும்போது அவை உயர் மின் அழுத்தம் மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் விழுவதால் மின்தடை ஏற்பட்டு, மின் சாதனங்களும் பழுதடைகின்றன.

மாடியில் காய வைக்கும் துணி எதிர்பாராது பறந்து மின்கம்பியில் விழுந்து மின்தடை ஏற்படுகிறது. அதை மக்கள் தாங்களாகவே எடுக்க முயற்சி செய்யும்போது மின் விபத்து ஏற்படுகிறது. அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடுவதால் மற்றும் பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பங்களுக்கு அருகில் சிறுவர்கள் விளையாடும்போது மின் விபத்து ஏற்படுகிறது.

இதுபோன்ற சம்பவம் ஏதேனும் நேர்ந்தால் 9498794987 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in