ராசிபுரத்தில் ரூ.1.67 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் :

ராசிபுரத்தில் ரூ.1.67 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்  வழங்கல் :
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில், 1487 பயனாளிகளுக்கு, ரூ.1.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் பேசும்போது, பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொதுமக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன, என்றார்.

முன்னதாக, அத்தனூர் பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 21 வகையான சீர் வரிசை பொருட்களை அமைச்சர் வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்

நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் ந.கதிரேசன், கோட்டாட்சியர் த.மஞ்சுளா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in