

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை வட்டம் மேட்டுப் பாளையம் கிராமத்துக்கு அரசுப் பேருந்துகள் சரியான நேரத் துக்கு வராததால் பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வி.களத்தூர் போலீஸார் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ராஜா பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட் டம் கைவிடப்பட்டது.