வர்த்தக மையத்தில் டிச. 5 வரை - வீட்டு ஃபர்னிச்சர் கண்காட்சி : 70 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு

வர்த்தக மையத்தில் டிச. 5 வரை -  வீட்டு ஃபர்னிச்சர் கண்காட்சி  :  70 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு
Updated on
1 min read

சென்னை வர்த்தக மையத்தில் நேற்று ‘வீட்டு ஃபர்னிச்சர் கண்காட்சி’ தொடங்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், ஆண்டு இறுதி சலுகையாக 70 சதவீதம் வரையிலான தள்ளுபடியுடன் ஃபர்னிச்சர்களை வாங்க முடியும்.

இக்கண்காட்சியை நடத்தும் இந்தியா ஃபர்னிச்சர் மார்ட் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பண்டிகைகளுடன் கூடியடிசம்பர் மாதம் தொடங்கிவிட்டது. புத்தாண்டு விரைவில் வரவுள்ள நிலையில், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் வீட்டு ஃபர்னிச்சர் கண்காட்சி நேற்று (டிச.2) தொடங்கப்பட்டுள்ளது.

வரும் டிச.5-ம் தேதி வரை 4 நாட்களுக்கு காலைமுதல் மாலை வரை இக்கண்காட்சியை காணலாம். வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான ஏராளமான ஃபர்னிச்சர்கள் இங்கு கிடைக்கும்.

ஒவ்வொருவரின் விருப்பமும் வெவ்வேறானவையாக இருக்கும். ஒரு வீட்டுக்கு பொருந்தும் ஃபர்னிச்சர் வேறு வீட்டுக்கு பொருந்தாது. எனவே உங்களுக்கு விருப்பமான பொருந்தக்கூடிய டிசைனை ஒரே இடத்தில் தேர்வு செய்ய முடியும்.

புதிய வீட்டுக்கோ, ஏற்கெனவே உள்ள வீட்டைபுதுப்பிக்கவோ தேவையான உள், வெளிப்புறத்துக்கு தேவையான நவீன டிசைன்களில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஃபர்னிச்சர்கள் இங்கு உள்ளன. சோபா, டைனிங் டேபிள், கட்டில், மாடுலர் கிச்சன், அலுவலக ஃபர்னிச்சர்கள், கார்பெட், படுக்கைகள், நீரூற்றுகள், குழந்தைகளுக்கான ஃபர்னிச்சர்கள் அனைத்தும் வாங்கக்கூடிய விலையிலும், பல சிறப்பு சலுகைகளுடனும் கிடைக்கும். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in