

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 439, பெண்கள் 279 என மொத்தம் 718 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கர்நாடகா, மேற்கு வங்கம், ஆந்திரா, கேரளா மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்த 9 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 118, சென்னையில் 117 பேர் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 8,200 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,492 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.