திருப்பூரில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு :

திருப்பூரில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு :
Updated on
1 min read

: உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, திருப்பூர் கல்லூரி சாலையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் பங்கேற்று, விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டு பேசினார். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

அதேபோல, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் அலகு 2 சார்பில், ரயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். அரசு மருத்துவர்கள் கலைச்செல்வன், பூரணி ஆஷா ஆகியோர் பங்கேற்று, எய்ட்ஸ் தின விழிப்புணர்வு தொடர்பாக பேசினர். ரயில் நிலைய வளாகம் முன்பு நடைபெற்ற நாடகத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் மனநல ஆலோசகர் அகிலாபானு உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in