

சென்னை ஐஐடி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை ஐஐடியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான முதல்கட்ட வளாக நேர்காணல் இணையவழியில் நேற்று (டிச.1) தொடங்கியது. இந்த நேர்காணலில் பங்கேற்க மொத்தம் 1,498 மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனர். இதில் 382 நிறுவனங்கள் பங்கேற்று தேவையான பணியாளர்களை தேர்வுசெய்ய உள்ளன. முதல் நாளில் 34 முன்னணி நிறுவனங்கள் மூலம் 176 வேலைவாய்ப்புகள் மாணவர்களுக்கு கிடைத்துள்ளன. இது கடந்தாண்டைவிட (123) 43 சதவீதம் அதிகமாகும்.