என்எல்சியுடன் இணைந்து அரசு ஐடிஐ திறப்பு :

நெய்வேலியில் புதிதாக தொடங்கப்பட்ட ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சபா. ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார் அருகில் என்எல்சி மனிதவளத் துறை இயக்குநர் விக்ரமன் மற்றும் அதிகாரிகள்.
நெய்வேலியில் புதிதாக தொடங்கப்பட்ட ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சபா. ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார் அருகில் என்எல்சி மனிதவளத் துறை இயக்குநர் விக்ரமன் மற்றும் அதிகாரிகள்.
Updated on
1 min read

நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்துடன் இணைந்து அரசு தொழிற் பயிற்சி நிலையத்தையை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

நெய்வேலி வட்டம்- 12-ல் புதிதாக தொழிற்பயிற்சி நிலையம் ரூ. 1 கோடியே 35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. து. இந்த தொழிற்பயிற்சி மையத்தில் இந்த ஆண்டு முதல் 124 மாணவ,மாணவிகள் சேர்க்கை நடைபெறு கிறது.

இதனை நேற்று சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அமைச்சர் சி.வே.கணேசன், என்எல்சி நிறுவனதலைவர் ராகேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் நெய்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாராஜேந்திரன் எம்எல்ஏ விண்ணப்பங்களை வழங்கி மாணவர் சேர்க் கையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் என்எல்சி மனித வளத்துறை இயக்குநர் விக்ரமன், நிதித்துறை இயக்குநர் ஜெயக்குமார் சீனிவாசன், என்எல்சி கண்காணிப்பு தலைமை அதிகாரி சந்திரசேகர், செயல் இயக்குநர்கள் மோகன், சதீஷ் பாபு, பண்ருட்டி ஒன்றியக்குழு தலைவர் சபா பாலமுருகன், நெய்வேலி தொமுச பேரவை துணை செயலாளர் வீர ராமச்சந்திரன், நெய்வேலி என்எல்சி தொமுச தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் பாரி, பொருளாளர் ஐயப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in