

தென்மண்டல அஞ்சல்துறை இயக்குநர் கே.ரவீந்திரன் முன்னிலை வகித்தார். வணிகம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு உதவி இயக்குநர் கே.கலைவாணி வரவேற்றார். இதில் சேமிப்பு வங்கி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு, செல்வமகள் சேமிப்பு திட்டங் களைச் சேர்ந்த அஞ்சல் அலுவலர்கள் மற்றும் முகவர்கள், கோட்ட கண்காணிப்பாளர்கள் உட்பட 12 மாவட்டங்களைச் சேர்ந்த 96 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், ஓய்வுபெற்ற அஞ்சல் சேவை வாரிய உறுப்பினர் (மனிதவளம்) வி.சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அஞ்சல் மற்றும் நிறுவுதல் பிரிவு உதவி இயக்குநர் ஜே.பிரதீப்குமார் நன்றி கூறினார்.