அவனியாபுரத்தில் நிரந்தர வாடிவாசலுக்கு மக்கள் எதிர்ப்பு :

அவனியாபுரத்தில் நிரந்தர வாடிவாசலுக்கு மக்கள் எதிர்ப்பு :

Published on

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர வாடி வாசல் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலன்று தொடங்கி அடுத்தடுத்து 3 நாட்களும் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி கோலா கலமாக நடைபெறுவது வழக்கம்.

அதற்காக அவனியாபுரம் கண்மாய் கரை அருகே நிரந்தர வாடிவாசல் அமைக்க நேற்று மண் பரிசோதனை நடந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இறந்தோருக்கு இறுதிச் சடங்கு செய்யும் இடத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு நடத்த வாடிவாசல் அமைப்பதா என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து அவனியாபுரம் காவல் நிலையம், ஆட்சியரிடம் மக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in