உரிய அறிவிப்புடன் நீர் நிலைகளில் இருந்து - உபரி நீரை வெளியேற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

உரிய அறிவிப்புடன் நீர் நிலைகளில் இருந்து -  உபரி நீரை வெளியேற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது  :  அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
Updated on
1 min read

வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை, நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்து ஆகியவை கணக்கிடப்பட்டு, சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகள், மாநிலத்தில் உள்ள இதர அணைகளில் இருந்து நீர் திறப்பது குறித்து பொதுமக்களுக்கு உரியமுன்னறிவிப்பு செய்து, பாதுகாப்பான அளவு நீரை நீர்த்தேக்கங்களில் இருப்பு வைத்துக் கொண்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக அவ்வப்போது உபரி நீர் திறந்துவிடப்பட்டதால், பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 561 பகுதிகளில் 227 பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டுவிட்டது. மீதமுள்ள 334 பகுதிகளில் அதிக திறன் கொண்ட பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது.

மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேற்ற 46 ஜேசிபி-க்களும், 918 அதிக திறன்கொண்ட பம்புகளும் தயார் நிலையில் உள்ளன. 54 படகுகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in