பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் - அந்திலி பழம் வியாபாரிக்கு 7 ஆண்டுகள் சிறை :

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் -  அந்திலி பழம் வியாபாரிக்கு 7 ஆண்டுகள் சிறை :
Updated on
1 min read

கண்டாச்சிபுரம் அருகே அந்திலி கிராமத்தை சேர்ந்த 19 வயதுடைய பெண்ணும், அதே கிராமத்தை சேர்ந்த பழ வியாபாரி சுரேஷ் என்பவரும் கடந்த 2009-ம் ஆண்டு ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

அப்போது சுரேஷ், அந்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி பழகியுள்ளார். இதனால் கர்ப்பமடைந்த அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள் ளும்படி சுரேஷிடம் வற்புறுத்தி கேட்டபோது அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

இதுகுறித்து அப்பெண், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக் குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். இதனிடையே அந்த பெண், பிரசவத்திற்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டபோது

அவருக்கு பெண் குழந்தை இறந்தே பிறந்தது. அந்த மன உளைச்சலில் இருந்த அந்த பெண்ணும், குழந்தை இறந்த 10 நாட்கள் கழித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நீதிபதி சாந்தி நேற்று சுரேஷ்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயி ரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in