பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி - சேலத்தில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம் :

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சேலம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது.        படம்: எஸ்.குரு பிரசாத்
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சேலம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: எஸ்.குரு பிரசாத்
Updated on
1 min read

பணி நிரந்தரம் கோரி சேலம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு சுகாதார ஆய்வாளர்கள் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, பொது சுகாதார அலுவலர் பிரபாகரன், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்க தலைவர் தனபால் ஆகியோர் தலைமை வகித்தனர். பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “கரோனா பெருந்தொற்றின்போது, தற்காலிக சுகாதார ஆய்வாளர் பணிக்கு மாநிலம் முழுவதும் 1,646 பேர் பணியமர்த்தப்பட்டனர். பெருந்தொற்றின் காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் மக்கள் உயிரை காப்பாற்ற கால நேரம் பாராமல் பணிபுரிந்தோம். எனவே, எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்றனர்.

கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இக்கூட்டத்தில் பல்வேறு சுகாதார ஆய்வாளர் சங்கங்களை சேர்ந்த மணிவண்ணன், உமாசங்கர், ஜெயசீலன், சுரேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in